×

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2, 2ஏ பணியில் 2,327 காலிபணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்; செப்டம்பர் 14ல் முதல்நிலை தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2‘‘ஏ” பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் 13 இடம், துணை வணிக வரி அலுவலர் 336 இடம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் 5, நன்னடத்தை அலுவலர் 1, சார்பதிவாளர் (கிரேடு 2) 5, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர் 2, சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் 2, குற்றப்புலனாய்வு தனிப்பிவு உதவியாளர் 19, சட்டம் உதவிபிரிவு அலுவலர் 3, டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர் 3,டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் 4, வனவர் 107, தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் வனவர் 7 இடங்கள் என 507 இடங்கள் அடங்கும்.

குரூப் 2ஏ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர் 1 இடம், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர் 497 இடங்கள், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் 273, வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண்மை வணிகம் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர் 12, வணிக வரிகள் 27, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை 124 காவல் உதவியாளர் 61, மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர் 28, போக்குவரத்து உதவியாளர் 32, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர் 25, தொழிலாளர் உதவியாளர் 42, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) உதவியாளர், கணக்கர், பண்டக காப்பாளர் 18, இந்து சமய அநிலையத்துறை உதவியாளர் 18, பள்ளிக்கல்வி உதவியாளர் 24, வனம் உதவியாளர் 38, தொழில்நுட்ப கல்வி உதவியாளர் 26, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உதவியாளர் 68, தலைமை செயலகம் நேர்முக எழுத்தர் 121, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உதவியாளர் (கிரேடு 3) 44, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு கழகம் கணக்கர் (நிதி) 26, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் விரிவாக்க அலுவலர் (கிரேடு 2) 22 என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு நேற்று முதல் டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. இத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 19ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அடுத்த மாதம் 24ம் தேதி முற்பகல் 12.01 மணி முதல் 26ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அதை தொடர்ந்து முதன்மைத் தேர்வு நடத்தப்படும். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான பாட்டத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

* தனித்தனி தேர்வு
இந்த முறை குரூப் 2 பதவிகளுக்கும், 2ஏ பதவிகளுக்கும் தனித்தனியே முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கு முன்பு இந்த 2 பதவிகளுக்கு ஒரே மாதிரியாக முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் இருந்து தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடக்கிறது என்பது குறிப்பி்டத்தக்கது.

The post தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2, 2ஏ பணியில் 2,327 காலிபணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்; செப்டம்பர் 14ல் முதல்நிலை தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட...