×

விலையேற்றத்தை தவிர்க்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: நமது நாட்டில் தக்காளி ரகங்கள், கோ-1, கோ-2, கோ-3, பிகேஎம்-1, பையூர்-1, சொரூபி, அர்காவிகாஸ், அர்காசௌரப், அர்கா அஹீட்டி, அர்காஆஷிஷ், அர்கா அலோக், உள்ளிட்ட ரகங்களை நமது நாட்டில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தக்காளி சாகுபடியினை மே, ஜூன், நவ., மற்றும் டிச., மாதங்களில் சாகுபடி செய்கின்றனர். தமிழகத்தில் உணவு விளைபொருட்களில் அதிக விலையும், அதிக நஷ்டத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்கக்கூடிய இடத்தில் தக்காளி சாகுபடி முதல் இடத்தில் இருக்கிறது. தக்காளி வரத்து குறைந்து விலை ஏற்றம் கண்டு, அரசே, தக்காளியை பதுக்குவோர் மீது நடவடிக்கை பாயும் என கூறும் அளவிற்கு தக்காளி தனது இடத்தை தக்கவைத்துள்ளது.

தக்காளி மட்டுமல்ல நமது தமிழகத்தில் விளைவிக்கப்படும் அனைத்து காய்கறி சாகுபடிக்கும் சில நேரங்களில் விலை ஏற்றம், இறக்கம் என்பது ஏற்படக்கூடிய ஒன்றாகும். இதற்கு காரணம் பயிர் சாகுபடியில் விவசாயிகள் நோய் தாக்குதலால் பாதிக்கின்றனர். பயிர்களை நடவு செய்து, களையெடுப்பு, மருந்து தெளிப்பு என அதிகளவில் செலவுகளை செய்தும் மகசூல் அறுவடைக்கு வரும்போது நோய் தாக்குதலால் இழப்பு ஏற்படுகிறது. தற்போது தக்காளி சாகுபடியில் அதிக செலவு செய்து நோய் தாக்குவதால் மிகமிக குறைந்தளவே அறுவடை செய்யப்படுகிறது. தக்காளி பயிரில் காய்புழு, நூற்புழுக்கள், இலைச்சுருட்டு நச்சுயிரி நோய், காஞ்சாரை நோய், வேர் அழுகல் நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குகிறது.

இதுகுறித்து பெரியகுளம் பகுதி தக்காளி விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தக்காளி விலை ஏற்றம் என்பது அதிகபட்சம் 10 முதல் 15 நாட்களுக்கு தான் நீடிக்கும். மீண்டும் தக்காளி வரத்து அதிகரிக்கும் நிலையில் விலை குறையும். தற்பொழுது தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு தக்காளியை விலை குறைவாக கிடைப்பதற்கு முனைப்பு காட்டி நடவடிக்கை எடுக்கிறது. இதுபோன்ற சூழலை தவிர்க்க தமிழக அரசு விளைவிக்கப்படும் காய்கறிகள் அனைத்திற்கும் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

The post விலையேற்றத்தை தவிர்க்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: அரசிடம் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...