×

இங்கிலாந்தில் நிறவெறி பிரதமர் சுனக் கவலை

லண்டன்: இங்கிலாந்தில் நிறவெறி அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என அந்தநாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி,பாலினம் மற்றும் வகுப்பு சார்ந்த பாகுபாடு காட்டப்படுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் இருந்து தெரியவந்ததாக கிரிக்கெட்டில் சமத்துவத்துக்கான சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக இங்கிலாந்து பிரதமரும் இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக்கிடம் பேட்டி கண்ட பிபிசி நிருபர் அவரது கருத்தை கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுனக்,‘‘ கிரிக்கெட்டில் இனவெறி இருப்பது எனக்கு தெரியாது. ஆனால் சிறுவனாக இருந்த போது நிறவெறியை அனுபவித்து உள்ளேன். நான் வகிக்கும் இந்த பதவியில் ஒவ்வொரு மணி நேரமும், நிமிடத்துக்கு நிமிடம் என விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நிறவெறி ஒருவரை கடுமையாக பாதிக்கும். நிறவெறி அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கிரிக்கெட்டில் அது நிலவுவதாக கூறப்படுவது என்னை போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் விஷயம்’’ என்றார்.

The post இங்கிலாந்தில் நிறவெறி பிரதமர் சுனக் கவலை appeared first on Dinakaran.

Tags : Sunak ,England ,London ,Rishi Sunak ,
× RELATED ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு