×

முதலையை மணந்த மேயர் மாப்பிள்ளை

அந்த காலத்தில் கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் செய்வதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதையெல்லாம் மிஞ்சும் வகையில் மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகர மேயர் ஹியூகோ சாசா, முதலை ஒன்றை மணப்பெண்ணாக ஏற்று திருமணம் செய்துள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்த மேயர் ஹியூகோ சாசா, மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்ட முதலையை திருமணம் செய்துகொண்டதும் அதற்கு அன்பு முத்தம் கொடுக்கிறார்.

மழை வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பழங்குடியின வழக்கத்தின்படி அவர் முதலையை மணந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேயர் மாப்பிள்ளை முதலையை மணக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை இப்போது கலக்கி வருகிறது.

The post முதலையை மணந்த மேயர் மாப்பிள்ளை appeared first on Dinakaran.

Tags : Mayor ,San Pedro ,Mexico ,Mappillai ,
× RELATED சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது