×

டாக்டர் மாரடைப்பால் மரணம் திருச்சியை சேர்ந்தவர் சிறப்பு பயிற்சிக்கு வேலூர் வந்த

வேலூர், ஜூலை 2: சிறப்பு பயிற்சி பெற வேலூர் வந்திருந்த திருச்சியை சேர்ந்த டாக்டர் மாரடைப்பால் இறந்தார். திருச்சி தென்னூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் திலீப்(31). டாக்டரான இவர் ஒருவார கால சிறப்பு பயிற்சிக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த வாரம் வந்தார். இதற்காக சத்துவாச்சாரி ஆர்டிஓ ஆபீஸ் ரோட்டில் உள்ள சிஎம்சி தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 28ம் தேதி மாலை 6 மணிக்கு தனது அறைக்கு திரும்பினார். மறுநாள் காலை பயிற்சிக்காக மருத்துவமனைக்கு இவர் வரவில்லை. அன்று மாலை 6 மணி வரை அவரது அறையும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து பார்த்தபோது கீழே விழுந்த நிலையில் திலீப் சடலமாக கிடந்தார். மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது அவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் டாக்டர் திலீப் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நேற்று முன்தினம் திலீப்பின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டாக்டர் மாரடைப்பால் மரணம் திருச்சியை சேர்ந்தவர் சிறப்பு பயிற்சிக்கு வேலூர் வந்த appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vellore ,Trichy Thennur… ,
× RELATED விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள்...