×

பொன்னமராவதி அருகே வாகன விபத்து: மேலும் ஒரு வாலிபர் பலி

பொன்னமராவதி, ஜூலை 2: திருமயம் மேலப்பனையூர் அருகே உள்ள புரகரப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வீரகுமார்(22). இவரும் பூவக்கோன்பட்டியை சேர்ந்த மெய்யர் மகன் கார்த்திக்(27) என்பருவரும் ஜூன் 1ம் தேதி டூவீலரில் கூடலூர்-புதுக்கோட்டை சாலையில் சென்றனர். அப்போது கூடலூர் விளக்கு ரோட்டின் அருகே எதிரே நெல் ஏற்றிவந்த சரக்குலாரியும், டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் வீரக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், ஜூன் 30ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகார்த்திக் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொன்னமராவதி அருகே வாகன விபத்து: மேலும் ஒரு வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Ponnamaravathi ,Veerakumar ,Villichami ,Purakarapatti ,Thirumayam Melappanaiyur ,Poovakonpatti ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு