×

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்: சா.மு‌.நாசர் எம்எல்ஏ துவக்கம்

பூந்தமல்லி, ஜூலை 2: அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியிலிருந்து பகுதியில் இருந்து அம்பத்தூர் வரை சென்று கொண்டிருந்த 20பி என்ற அரசு பேருந்து கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு. நாசரிடம் அந்த வழித்தட பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து அம்பத்தூர் வரையிலான 20பி வழித்தட பேருந்தை, மேல் அயனம்பாக்கத்திலிருந்து மக்கள் பயன் பாட்டிற்காக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ நேற்று கொடியசைத்து துவைக்கி வைத்தார். இயக்கப்பட்ட பேருந்தில் நாசர் எம்எல்ஏ பயணம் மேற்கொண்டு உடன் பயணம் செய்தவர்களுக்காக பயண சீட்டுக்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். பேருந்து இயக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதில், திருவேற்காடு நகர மன்றத் தலைவர் மூர்த்தி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாலன், ராஜேந்திரன், பவுல், வார்டு கவுன்சிலர் பிரதானம், மற்றும் திமுக நிர்வாகிகள் சங்கர், சரவணன், நடராஜ், தெய்வசிகாமணி, துரைகோபால், செல்லதுரை, சுதாகர், பரிசமுத்து, இளையராஜா, ராஜி, நாராயணன், நரேஷ், பெருமாள், மோகன் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்: சா.மு‌.நாசர் எம்எல்ஏ துவக்கம் appeared first on Dinakaran.

Tags : CM Nassar ,MLA ,Poontamalli ,AIADMK ,CM ,Nasser ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...