×

நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் 3ம் நாளாக எரியும் தீ

நாகர்கோவில், ஜூலை 2: நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரிவிளையில் உள்ள குப்பைக்கிடங்கில் 3ம் நாளாக தீ பற்றி எரிந்து வருவதால் தொடர்ந்து அந்த பகுதிகள் புகை மண்டலமாக காட்சி தருகிறது.
நாகர்கோவில் பீச் ரோடு வலம்புரிவிளை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்பட்டு வருகிறது. தினசரி நூறு டன்களுக்கு மேல் குப்பைகள் வரை இங்கு கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் பெருமளவு தேங்கி காணப்படுகிறது. இந்த குப்பைகள் அடிக்கடி தீ பிடித்து எரிகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் குப்பை கிடங்கில் திடீரென்று மீண்டும் தீ பிடித்தது.

இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வருகை தந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புகை மண்டலம் மற்றும் துர்நாற்றத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மூன்றாவது நாளாக நிலைமை சீரடையவில்லை. தொடர்ந்து அந்த பகுதிகள் புகை மண்டலமாக காட்சி தருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

The post நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் 3ம் நாளாக எரியும் தீ appeared first on Dinakaran.

Tags : Nagercoil Corporation ,Nagercoil ,Nagercoil Municipal Corporation ,Valampurivilai ,
× RELATED புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம்