×

தோகைமலை அருகே அனுமதியின்றி மது விற்ற 5 பேர் அதிரடி கைது

தோகைமலை, ஜூலை 2: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டி கணேசன் மனைவி பழனியம்மாள் (36). இவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதேபோல், கல்லடை ஊராட்சி தெற்கு முத்துச்சாமி (65). இவர் தனது வீட்டின் பின்புறமும், சேப்பளாப்பட்டி ஊராட்சி மேலமேடு முருகன் (46). இவர் ஆலத்தூர் முள்காட்டிலும், கல்லடை ஊராட்சி கல்லடை அண்ணா நகர் ஜல்ஜா (34). இவர் தனது பெட்டிக்கடையிலும், பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப்பட்டி மலர்கொடி (45). இவர் தனது வீட்டின் பின்புறமும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அந்தந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது பழனியம்மாள், முத்துச்சாமி, முருகன், ஜல்ஜா, மலர்கொடி ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அனைவரையும் கைது செய்தனர்.

The post தோகைமலை அருகே அனுமதியின்றி மது விற்ற 5 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Palaniammal ,Goundampatti Ganesan ,Thondamanginam Panchayat ,Karur ,Tokaimalai ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்