×

மாமன்னன் திரைப்படம் வெளியீடு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

உடுமலை,ஜூலை1: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.அதைத்தொடர்ந்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். உடுமலையில் 2 தியேட்டர்களில் மாமன்னன் வெளியாகியுள்ளது. இதையொட்டி, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர், பொதுமக்கள் படத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். அப்போது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post மாமன்னன் திரைப்படம் வெளியீடு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Udumalai ,State Youth Secretary ,Udayanidhi Stalin ,Tamil Nadu ,Mamannan ,
× RELATED நல்லூரில் புதியதாக கட்டிய திமுக...