×

திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஆவின் பால் பூத் திறப்பு கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக கூட்டுறவுத்துறை மூலம் ஆவின் பால் பூத்தை கலெக்டர் சாரு மற்றும் எம்எல்ஏ பூண்கலைவாணன் நேற்று திருவாரூரில் திறந்து வைத்தனர். திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் மாவட்டத்திலேயே முதன் முதலாக ஆவின் பால் பூத் திறப்பு விழாவானது நேற்று திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்றது. இதனை கலெக்டர் சாரு மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பொதுமக்களுக்கு விற்பனையையும் துவக்கி வைத்தனர். இதில்தஞ்சை ஆவின் பொது மேலாளர் ராஜசேகர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் சித்ரா,ஆர்டிஓ சங்கீதா, நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், துணை தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் கூட்டுறவு மேலாண்மை இயக்குனர்கள் விஜயன், குமாரசாமி, மேலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா கூறுகையில், மாவட்டத்தில் ஏற்கனவே ஆவின் பாலகம் மற்றும் ஆவின் பூத் இயங்கி வந்தாலும் கூட்டுறவு துறையின் மூலம் முதன் முதலாக திருவாரூர் கீழ வீதியில் ஆவின் பூத்தானது திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆவின் பால், நெய், இனிப்புகள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்யப்படுவதால் இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஆவின் பால் பூத் திறப்பு கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur District ,Aavin Milk Booth ,MLA ,Tiruvarur ,Charu ,Poonkalaivanan ,
× RELATED ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மின்...