×

புதுச்சேரி-சென்னைக்கு இ-பஸ் சேவை துவக்கம்

 

புதுச்சேரி, ஜூலை 1: புதுச்சேரியில் இருந்து தினமும் சென்னைக்கு பல்ேவறு வசதிகளுடன் கூடிய இ-பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் நிறுவனம் நியூகோ இந்தியா முழுவதும் இ-பஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், இந்தூர், மும்ைப, பெங்களூர், விஜயவாடா, திருப்பதி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்தாண்டு முதல் இ-பஸ் இயங்கப்பட்டு வருகிறது. அதேபோல், பல்வேறு நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தினமும் இ-பஸ் இயக்க இந்நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, புதுவையில் இப்பேருந்து சேவை கடந்த மாதம் முதல் துவங்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 6 மணி, 7 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 11 மணி ஆகிய நேரங்களில் புதுவையில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் இயங்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் சென்னையில் இருந்தும் புதுவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 41 இருக்கைகளை கொண்டுள்ள இ-பஸ் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு செல்கிறது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.285 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் ஓட்டுநர் கண்காணிக்க 2 சிசிடிவி கேமராக்களும், பயணிகளின் பாதுகாப்புக்கு 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பயணம் ஆரம்பிக்கும் முன்பு ஓட்டுநர் மது அருந்தி இருக்கிறாரா என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது.

அவர் மது அருந்தவில்லை என தெரியவந்தால் மட்டுமே ஓட்டுநர் பேருந்து இயக்க அனுமதிக்கப்படுகிறார். ஒவ்வொரு பயணிகள் இருக்கைக்கு அருகேயும் அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் டிராக் தொழில்நுட்ப வசதியும், ஓட்டுநருக்கு தூக்கம் வரும் மாதிரி இருந்தாலும், செல்போன் பயன்படுத்தினாலும் உடனே தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கும் வசதியும் உள்ளது. அதேபோல், பயணிகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இருக்கை அருகே உள்ள சுவிட்சை ஆன் செய்தால், உடனே உதவியாளர் வந்து தேவையான உதவியை செய்து தரும் வசதியும் உள்ளது. பல்வேறு வசதிகளுடன் புதுவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் இந்த மின்சார பேருந்தில் பயணம் செய்ய பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post புதுச்சேரி-சென்னைக்கு இ-பஸ் சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Puducheri-Chennai Puducherry ,Puducherry ,Chennai ,Puducheri-Chennai ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் நுழைவுவாயில்...