×

ராகுல் பிரதமரானால் ஊழல்தான் நடக்கும்: அமித் ஷா பரபரப்பு பேச்சு

உதய்பூர் (ராஜஸ்தான்): ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல் மற்றும் மோசடி தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பல வழிகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டு வியூகம் வகுக்க பாட்னாவில் கூடியிருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பவில்லை. சோனியா காந்தியின் குறிக்கோள் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவது. லாலுவின் இலக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவது, மம்தா பானர்ஜியின் நோக்கம் தனது மருமகன் அபிஷேக்கை முதல்வராக்குவது, அதேபோல் அசோக் கெலாட் தனது மகன் வைபவை முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராகுல் காந்தி பிரதமரானால், ஊழலும், மோசடியும் இந்தியாவின் தலைவிதியாக மாறும். மோடி மீண்டும் பிரதமரானால், மோசடிக்காரர்கள் அனைவரும் சிறைக்குள் செல்வார்கள். நான் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளேன். அதன்அடிப்படையில் பார்த்தால் 300 இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராகப் போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

The post ராகுல் பிரதமரானால் ஊழல்தான் நடக்கும்: அமித் ஷா பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : rahul ,amit shah ,Udaipur ,Rajasthan ,Rahul Gandhi ,India ,Home Minister ,PM ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...