×

பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்க எக்ஸைமர் லேசர் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை அறிமுகம்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அப்போலோ மருத்துவமனையின் இதயநோய் மற்றும் மின்னணு உடலியல் மருத்துவர் கார்த்திகேசன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் நோயாளிகளில் 72 வயதான ஒருவருக்கு அதிநவீன லேசர் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதய துடிப்பு கோளாறுகள் உள்ளவர்களுக்கு பொருத்தப்படும் பேஸ் மேக்கர் போன்ற மின்னணு சாதனங்களை பராமரிப்பது மிக முக்கியமானது.

சில நேரங்களில், பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட பிறகு, உடல்நலம் தேறி வரும் போது, சிகிச்சைக்குப் பிந்தைய வடுக்கள் காரணமாக உள்ளே பொருத்தப்பட்ட சாதனங்களின் ஈய கம்பியின் முனைகள் இதய திசுக்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்.கம்பிகளை அகற்ற மருத்துவர்கள் சில நேரங்களில் இதய அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்வர். இருப்பினும் மற்ற பிரித்தெடுக்கும் சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும் போது, எக்ஸைமர் லேசர் சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் ஆற்றல் வாய்ந்த ஒன்றுமாகும்.

எக்ஸைமர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது 308 நானோ மீட்டர்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் புற ஊதா கதிர்களின் குளிர்ந்த கற்றையை வெளியிடுவதன் மூலம், கட்டியை உடைத்து, ஆவியாக்கி, ஒட்டியிருக்கும் முனைகளை துல்லியமாக அகற்றி விடும் செயல் முறையாகும். செயல்முறையின் இந்த பகுதி துடிப்புள்ள ஒளியால் அகற்றுதல் என்று அழைக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக, லேசர் ஒளிக் கற்றையின் ஊடுருவல் 50 மைக்ரான்கள் ஆழம் வரை மட்டுமே செல்வதால் இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும், உயிரை பாதுகாக்கக் கூடியதாகவும் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்க எக்ஸைமர் லேசர் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Apollo Hospitals ,Chennai ,Karthikesan ,Apollo Hospital ,Thenampettai, Chennai ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...