×

இ-பாஸ் நடைமுறை தெரியாமல் நீலகிரிக்கு வருவதால்; அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி: நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியான கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள். பலரும் இ-பாஸ் நடைமுறை தெரியாமல், நீலகிரிக்கு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். நெட்வர்க் பிரச்னை மற்றும் ஒரே நேரத்தில் பலர் இ-பாஸ் பெற முயற்சி செய்வதால் OTP வர தாமதமாகிறது. இ-பாஸ் பெறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

The post இ-பாஸ் நடைமுறை தெரியாமல் நீலகிரிக்கு வருவதால்; அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Tamil Nadu ,Kerala ,Gudalur Nadukani ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...