×

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஹேமராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் 11 ஹெக்டேரில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த மணல் குவாரி அமைப்பதற்கு முன்பாகவே கருத்து கணிப்பு கூட்டத்திலும், கிராம பஞ்சாயத்திலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது, 11 ஹெக்டேரில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மணல் குவாரியை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும், புகைப்படங்களையும் பார்த்த நீதிபதி, 2 பொக்லைன்கள் பயன்படுத்த அனுமதி தரப்பட்ட நிலையில் 6 பொக்லைன்கள் பயன்படுத்தப்படுவது தெரிகிறது. அதேசமயம் ஆற்றில் ஒரு மீட்டர் ஆழத்துக்கும் மேல் மணல் அள்ளுவதும் புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெரிகிறது என்று குறிப்பிட்டார். மனுதாரர் ஆய்வு செய்ததால் ஒருசில விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது; நான் நேரடியாக சென்று பார்த்தால் 10க்கும் மேற்பட்ட விதிமீறல்களை கண்டறிய முடியும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மணல் குவாரி தொடர்பாக தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஆகியவை 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram District ,Sand Quarry ,Anadimangalam River Sand Quarry ,Anadimangalam ,Chennai ,Ikord ,Southennai River ,Anadimangal, Viluppuram district ,Vilappuram ,Southenney River ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...