×

ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பம்: உயிர்காக்கும் எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னை: சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கு நெரிசல் நிறைந்த நேரங்களில் விபத்தில் சிக்கியவர்கள் அல்லது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரை ஆம்புலன்ஸில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது சவாலாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் நேரமான கோல்டன் அவர்ஸுக்குள் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துக்கு பிரிவு எம் சைரன்என்ற ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா திரையரங்கம் சிக்னல் அருகே போக்குவரத்துக்கு காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் படி ஆம்புலன்ஸ்களில் உள்ள சைரன்களில் ஸ்மார்ட் சைரன் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும் போது ஒரு சமீட்னையை வெளிப்படுத்தும். இதை 200 மீட்டர் தொலைவுக்கு முன்னரே சிக்னலில் உள்ள மென்பொருளின் ரிசீவர் பெற்று ஆம்புலன்ஸ் வரும் திசைக் குறித்த தகவலை சிக்கனலில் உள்ள எல்.ஈ.டி திரையில் ஒளிபரப்பும் அதில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும்படி எச்சரிக்கை வாசகங்களும் ஒளிபரப்பாகும். இதன் மூலம் போக்குவரத்துக்கு காவலர்களும் வாகன ஓட்டிகளும் ஆம்புலன்ஸ் வருவதை எளிதில் புரிந்து கொண்டு வழிவிட முடியும்.

The post ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பம்: உயிர்காக்கும் எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : M Siren ,Chennai ,M Siren Smart Ambulance Scheme ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்