×

பண்டார தோப்பு, புளியடி பகுதிகளில் நெல் சாகுபடி பாதிப்பு: கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் முறையாக தூர்வார படாததால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் பேச்சுபாறை, பெருஞ்சானி, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு அணைகள் கடந்த ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

ஆனால் அணை திறப்பதற்கு முன்பு கால்வாய்கள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கியும் முறையாக அப்பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் புகார் ஆகும். கால்வாய்களில் போதிய தண்ணீர் வந்து சேராததால் பண்டாரத்தோப்பு, புளியடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். எனவே கால்வாய்களை உடனடியாக தூர்வாரி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கிடைக்க செய்தால் தான் எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

The post பண்டார தோப்பு, புளியடி பகுதிகளில் நெல் சாகுபடி பாதிப்பு: கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bandara grove ,bulidi ,Kannyakumari ,Bandara Gardens ,Bliudi ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...