×

கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ கிராமங்களில் திடீரென கடல் சீற்றம்: பல அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகளால் அச்சம்

கன்னியாகுமரி: குமரிமாவட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் தனுஷ்கோடியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக கடல் அலைகள் பல ஆதி உயரத்திற்கு எழும்பின. கோவளம், வாவுதுறை, பிள்ளை தோப்பு, அழிக்கால், மேலதுறை உள்ளிட்ட கடற்கரை மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அத்துடன் பிள்ளை தோப்புபகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் முழுவதுமாக கடல் நீரால் நிரம்பியது.

இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். இதே போல ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் வரலாறு காணாத அளவிற்கு கடல் சீற்றம் ஏற்பட்டு 20 அடிக்கு மேல் கடல் அலைகள் எழும்பின. சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி கடல் நீர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதனால் சாலையில் ஜல்லி கற்கள் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையான பகுதிகளில் உள்ள கடைகளை கடல் அலை சூழ்ந்திருப்பதால் அவர்கள் அச்சமடைந்தனர்.

The post கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ கிராமங்களில் திடீரென கடல் சீற்றம்: பல அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகளால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,KANNYAKUMARI ,Kumarimavatta ,Dhanushkodi ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...