×

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மெத்தனால், எத்தனால், பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஒன்றிய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மெத்தனால், எத்தனாலில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் தவிர 3,000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்துள்ளனர்.

The post பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...