×

பீகார் கவர்னர் கால் தவறி கீழே விழுந்தார்

பாட்னா: பீகார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்னாவில் சுதந்திர போராட்ட வீரர் முங்கேரி லால் என்பவரின் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கவர்னர் வந்தார். விழா மேடைக்கு செல்லும் போது அவர் கால் தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை மெதுவாக தூக்கி விட்டனர். இதில் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் அதன் பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

The post பீகார் கவர்னர் கால் தவறி கீழே விழுந்தார் appeared first on Dinakaran.

Tags : Governor of ,Bihar ,Patna ,Governor ,Rajendra Vishwanath Arlekar ,Mungeri Lal ,Dinakaran ,
× RELATED பீகாரில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு