×

சினிமா தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகையின் கணவருமான ரவீந்தர் ரூ.15 லட்சம் பெற்று மோசடி: அமெரிக்க வாழ் இந்தியர் போலீசில் புகார்

சென்னை: சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், தன்னிடம் ரூ.15 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் வாழும் விஜய் என்பவர் புகார் ஒன்று அனுப்பி உள்ளார். அதில், நான் கிளப் ஹவுஸ் என்ற ஆப் மூலம், சினிமா தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரான ரவீந்தர் நண்பரானார். கடந்த ஆண்டு மே 8ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர், என்னை தொடர்பு கொண்டு, என் புதிய படத்தில் நடிக்கும் நடிகருக்கு அவசரமாக ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும். உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். அதற்கு, நான் என்னிடம் ரூ.15 லட்சம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தேன். அந்த பணத்தை ரவீந்தர் நிறுவனமான லிப்ரா புரடெக்‌ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். 10 நாளில் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறியும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. அவரிடம் என் பணத்தை கேட்டால், எனது மனைவி பற்றி அவதூறாக பேசியதுடன், செல்போன் இணைப்பை துண்டித்தும், என் நம்பரை பிளாக்கும் செய்துவிட்டார். பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய ரவீந்தர் மீது நடவடிக்கை எடுத்து அதை மீட்டு தர வேண்டும். நான் அிநான் அமெரிக்காவில் இருப்பதால் மெயில் மூலம் எனது புகாரை அனுப்பி உள்ளேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சினிமா தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகையின் கணவருமான ரவீந்தர் ரூ.15 லட்சம் பெற்று மோசடி: அமெரிக்க வாழ் இந்தியர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Ravinder ,Chennai ,
× RELATED ஹெலிகாப்டர் திருட்டு: உ.பி.பாஜ அரசை சாடும் அகிலேஷ் யாதவ்