×

அரையிறுதியில் லுசியா

ஹோம்பட்: ஜெர்மனியில் பேட் ஹோம்பட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் முதல் காலிறுதி ஆட்டத்தில் நேற்று இத்தாலியின் லுசியா பிரோன்செட்டி(24வயது, 65வது ரேங்க்), பிரான்சின் வர்வரா கிரிச்சோவா(22வயது, 43வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை வர்வராவின் சவாலை சமாளித்த லுசியா, அதை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கினார். தொடர்ந்து 2வது செட்டையும் கூடுதல் வேகம் காட்டி 6-3என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 16நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் லுசியா 2-0 என்ற நேர் செட்களில் வர்வராவை வீழ்த்தி, முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்(22வயது, போலாந்து) உடன் மோதும் சூழல் உள்ளது.

The post அரையிறுதியில் லுசியா appeared first on Dinakaran.

Tags : Lucia ,Hombat ,Bad Hombat Open Women's Tennis Tournament ,Germany ,Italy ,Dinakaran ,
× RELATED விமானம் கடலில் விழுந்து ஹாலிவுட் நடிகர், 2 மகள் பலி