×

தெருமுனை பிரசாரம்

 

களியக்காவிளை, ஜூன்29: களியக்காவிளை பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரி, பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் மேசியதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அருள்குமார், தோவாளை தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், இந்திய மாதர் தேசிய சம்மேள மாவட்ட செயலாளர் செல்வராணி, வடக்குதாமரைகுளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அருணாசலம் ஆகியோர் பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் போராட்ட நோக்கம் குறித்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி மாவட்டத்தலைவர் அனில்குமார் கூட்டத்தை முடித்து வைத்து பேசினார். கூட்டத்தில் மஞ்சாலுமூடு கிளைச் செயலாளர் மரியதாஸ், கனி, விஜயன், கோபாலகிருஷ்ணன், மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் டென்னிசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Kalikavlai ,Communist Party of India ,station ,Dinakaran ,
× RELATED காந்தியை குறைத்து மதிப்பிட்டு...