×

ஹோண்டா ஷைன் 125

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஷைன் 125 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில், புதிய வாகன விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்ப அம்சம் இடம் பெற்றுள்ளது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்தலாம். இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. டிரம் பிரேக் உடன் கூடிய பைக், ஷோரூம் விலையாக சுமார் ரூ.79,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் கொண்டது ஷோரூம் விலையாக சுமார் ரூ.83,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 123.94 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு பியூயல் இன்ஜக்‌ஷன் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர் இடம் பெற்றுள்ளது. இதுதவிர இன்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் சுவிட்ச் , ஹைபீம் பிளாஷர், கோம்பி பிரேக் சிஸ்டம் உள்ளன.

The post ஹோண்டா ஷைன் 125 appeared first on Dinakaran.

Tags : Honda ,Honda Motorcycle ,Scooter India Company ,
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...