×

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ₹5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர். எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

இதனால் அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Government Conception Centre ,Tamil Nadu ,India ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Chennai Elempur ,Madurai ,Government Fertilization Centre ,Ma ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...