×

பவானி அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

பவானி: பவானி அருகே வாய்க்கால்பாளையத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த வாய்க்கால்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட தொலைவில் உள்ள சின்னியம்பாளையத்தில் உள்ள ரேசன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தனர். எனவே, பொருட்களை வாங்கி வருவதில் சிரமம் உள்ளதாகவும், அருகாமையில் உள்ள வாய்க்கால்பாளையத்தில் புதிதாக கடை திறந்தால் பெரிதும் பயனளிக்கும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 13 ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, திப்பிசெட்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் கீழ் வாய்க்கால்பாளையத்தில் புதிதாக பகுதி நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து வாய்க்கால்பாளையம் மேல் வலவு, கீழ் வலவு, நல்லிக்காடு, கன்னிவாய்க்கால், ஜம்பை புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 230 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர். இக்கடையில், ஜம்பை பேரூராட்சி தலைவர் ஆனந்தகுமார் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணை தலைவர் ஜெய்சுதா சீனிவாசன், பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பவானி கே.ஏ.சேகர், துணை செயலாளர் டி.எஸ்.சுரேஷ்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சதாசிவம், அன்பரசி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பவானி அருகே புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Bhavani ,Vaikalpalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது