×

அதிமுக ஆட்சியின்போது பெருமகளூர் பேரூராட்சியில் முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சியில் 2018ம் ஆண்டு முதல்(அதிமுக ஆட்சியின்போது) நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர் வீரையன், காங்கிரஸ் நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப வழங்க வேண்டும். பேரூராட்சி மன்ற கூட்டத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும். 6வது வார்டு உறுப்பினர் நீண்ட காலமாக ஊரில் இல்லாததாலும், கூட்டத்தில் பங்கேற்காததாலும், அந்த வார்டுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post அதிமுக ஆட்சியின்போது பெருமகளூர் பேரூராட்சியில் முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Perumakalur ,AIADMK ,Peravoorani ,Thanjavur District ,Setupavasthram Union ,ADMK ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...