×

அமைச்சர் ரகுபதி பெருமிதம் தீயணைப்பு துறையினர் பிடித்தனர் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும்

கந்தர்வகோட்டை: இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா வழிக்காட்டுதலின்படி கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிகுளப்பம்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்ட போது செல்வமணி, மஞ்சுளா, பிரேமா ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது. இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சிறப்பாக பணியாற்றி வரும் ஆண்டிகுளப்பம்பட்டி இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களை பாராட்டினார். தன்னார்வலர்கள் எண்ணும் எழுத்தும் கற்றல் அடைவுகள், குறைதீர் கற்பித்தல், வாசிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும், மாணவர் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கும் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு மேலும் ஆலோசனை வழங்கியபோது கூறியதாவது:

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய வருகை பதிவை பள்ளி மேலாண்மை குழு செயலியில் பதிவு செய்ய வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் பணிகளையும், தொடக்க நிலை உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாட வேண்டும். பெற்றோர்களிடம் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு தங்களுடைய குழந்தைகளை தொடர்ந்து அனுப்புமாறு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் வருகையை தினந்தோறும் இல்லம் தேடி கல்வி செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டம் தொடக்க மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை நடைமுறையில் உள்ளது, பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். தங்களுடைய படைப்பு திறன்களை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழுக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாசித்தல், கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று தருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது என்றார். நிகழ்ச்சியில் தெற்கு வாண்டான்விடுதி தெற்கு தொடக்க பள்ளி தலைமையாசிரியர் சின்னராஜா உடனிருந்தார்.

The post அமைச்சர் ரகுபதி பெருமிதம் தீயணைப்பு துறையினர் பிடித்தனர் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi Perumitham ,Gandharvakottai ,Home Search Education Center ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...