வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதி, தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து அடிக்கடி ஆந்திரா, கர்நாடக மாநிலத்திற்கு லாரி மற்றும் ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி. குப்பம் காட்பாடி ஆகிய தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு வெளியூரிலிருந்து குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு பதுக்கி வைத்து ரயில் மூலம் கடத்தப்படுகிறது. அதன்படி நேற்று மர்ம நபர்கள் குடியாத்தம் அடுத்த மேல்பட்டிக்கு வந்த ரயிலில், மூட்டை மூட்டையாக கடத்தல் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கர்நாடகாவுக்கு கடத்தி சென்றுள்ளனர். இதனைப்பார்த்த பயணிகள், ரேஷன் அரிசி கடத்தும் நபர் மூட்டையுடன் செல்வதை வீடியோ மற்றும் படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
The post ரயிலில் மூட்டை மூட்டையாக கடத்தப்படும் ரேஷன் அரிசி appeared first on Dinakaran.