×

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னைதான், சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தீட்சிதர்கள் என்றாலே பிரச்னைதான்; சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள். சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளபடும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தீட்சிதர்கள் என்றாலே பிரச்சினை தான், தீட்சிதர்களை பொறுத்தவரையில் சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள். நம்மை பொறுத்தவரையில் வழிபாட்டு முறைகளில் ஆதி காலம் தொட்டு என்ன முறை பின்பற்றபடுகிறதோ அதில் துளிஅளவு கூட அறநிலையத்துறை தலையிட்டு வழிபாட்டு முறைகளை மாற்றும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் திருகோயில் மன்னர்கள் காலத்தில் கட்டபட்டது.

இந்த கோயிலை denomination temple-ஆக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். னம்மை பொறுத்தவரையில் மக்களுடைய நன்கொடைகளால் இந்த திருகோயில்கள் நடந்துவருகின்றன. சிதம்பரம் கோயிலில் ஒரு உண்டியல் கூட இருக்காது, ஆனால் மற்ற திருகோயிகளில் உண்டியல்கள் இருக்கும், வரவு-செலவு இருக்கும்.

இந்த திருகோயிலை இந்துசமய அறநிலையத்துறையிடம் இருந்து எடுக்கும்போது இருந்த திகோயிலின் மொத்த பணம் எவ்வளவு என்பதை இதுவரை தணிக்கை செய்வதற்கு கூட அவர்கள் அனுமதிக்க மறுகின்றனர். அதேபோல் திருகோயிலுக்கு சொந்தமான விலை மதிப்புயர்ந்த தங்க நகைகள், ஆபரணங்கள் வரவு குறித்த கணக்குகளை கூட காண்பிக்க மறுத்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். இதையே அரசு தட்டிகேட்கிறது. மக்கள் பணத்தால், மக்களின் முழு அற்பணிப்பால் நடக்கும் திருகோயில்களில் அரசுக்கு வெளிப்படையாக சேர்க்க வேண்டிய தகவல்களை கூட சேர்க்க மறுகின்றனர். உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிபடையில், கனகசபையின் மேல் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பின் அடிபடையில், கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அரசு ஆணை பிறபித்தது. தீட்சிதர்கள் திருமஞ்சனம் என்ற காரணத்தை காட்டி 4 நாட்கள் அனுமதி மறுக்கின்றனர். இதற்கு எந்த நடைமுறையும் இல்லை. ஆகவே இந்த 4 நாட்களும் பக்தர்களை நீதிமன்ற தீர்பின்படி, அரசாணையின் படி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நியாயத்தின் பக்கம் நின்று கொண்டிருக்கிறோம்.

அவர்கள் வைத்தது தான் சட்டம் என்பதுபோல் 200 தீட்சிதர்கள் அந்த திருகோயிலை ஆட்டிவைத்துகொண்டிருகிறார்கள். இதைதான் நாங்கள் எதிர்கின்றோம். ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றார்.

The post தீட்சிதர்கள் என்றாலே பிரச்னைதான், சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Dikshitas ,Government of Dikshti ,Chidambaram Temple ,Hindu Religious Foundation ,Chennai ,Dikshitras ,Chidambaram ,Chidambaram Temple Hindu Reliquary Foundation ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி