×

மோகனூரில் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம்

மோகனூர், ஜூன் 27:மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரிழுத்தனர். மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் அலங்கரிக்கப்பட்டு அன்னவாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா எடுத்துவரப்பட்டனர். இதனையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டவாறு தேரினை இழுத்து சென்றனர். தேர் பெரிய அக்ரஹாரம், சின்ன அக்ரஹாரம், மேட்டுத்தெரு வழியாக வந்து காவேரி ஆற்று சாலை வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் சந்திராம்மாள், மோகனூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்லவேல், உடையவர், கிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மோகனூரில் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Prasanna Venkataramana Perumal Temple ,Moganur ,Mohanur ,Kalyana Prasanna Venkataramana Perumal temple procession ,Prasanna ,Venkataramana ,Perumal temple ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது