×

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே டீ கப்பில் சிலுவை வடிவிலான எழுத்துக்கள்: கடைக்கு ‘சீல்’

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் டீ கப்பில் சிலுவை வடிவிலான எழுத்துக்கள் பயன்படுத்திய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரசாரம் செய்யும் விதமாக அதன் சின்னங்கள், கொண்டு வரவும் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வழங்கப்பட்ட டீ கப்பில் சிலுவையின் அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அந்த டீக்கடைக்கு சீல் வைத்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே டீ கப்பில் சிலுவை வடிவிலான எழுத்துக்கள்: கடைக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Tags : Tirupati Edemalayan Temple ,Tirumalai ,Tirupati Ethumalayan temple ,Tirupati ,Ethumalayan Temple ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...