×

பாஜ மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே மறைவு: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி: உ.பி.யை சேர்ந்த பாஜ மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் துபே கடந்த 12ம் தேதி உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள போர்ட்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. இவர் உ.பி.யில் கல்யாண் சிங் முதல்வராக இருந்த போது நிதியமைச்சராக பணியாற்றியவர். 2 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post பாஜ மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே மறைவு: பிரதமர், ஜனாதிபதி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya Sabha ,Hardwar Dubey ,President condole ,New Delhi ,Rajya ,Sabha ,UP ,Delhi ,
× RELATED கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் (ராஜ்யசபா) பதவிக்காலம் நிறைவு