×

சங்ககிரி அருகே பாரம்பரிய நிகழ்வான ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் பங்கேற்பு..!!

சேலம்: சங்ககிரி அருகே மேற்கு மாவட்டங்களின் பாரம்பரிய நிகழ்வான ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா விமர்சியாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் சங்ககிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்களின் 35-வது ஈசன் வள்ளி கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபத்தின் அருகில் விமர்சியாக நடைபெற்றது. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து பசுமாடு, குதிரை, ஏர் கலப்பை, மண் வெட்டி, கலை வெட்டி போன்றவற்றுடன் ஊர்வலமாக வந்து தீரன் சின்னமலை மணிமண்டபத்தின் முன்பு வைத்து வழிபாடு செய்தன.

பின்னர் 6 வைத்து முதல் 60 வயதிலான பெண்கள் பங்கேற்ற ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்று நடைபெற்றது. ஆண்களின் நாட்டுபுற இசைக்கு தகுந்தார் போல் பெண்கள் அனைவரும் நடனமாடிய காட்சி வியக்க வைத்தது. வள்ளி கும்மி ஆட்டம் என்பது முருக பெருமானின் கதையை 40 பாடல்களாக பாடி அதற்கேற்ப நடனமாடி மகிழும் ஒரு கலை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வள்ளி பிறந்தது முதல் முருக பெருமானை கண்டு காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்யும் வரை பாடல்களாக பாடி அதற்கேற்ப ஆடும் நடனமே வள்ளி கும்மி எனவும் கூறினர்.

The post சங்ககிரி அருகே பாரம்பரிய நிகழ்வான ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Esan Valli Kummi ,Sangakiri ,Salem ,Salem… ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...