×

சங்குகுளி தொழிலாளி சாவு

தூத்துக்குடி:தூத்துக்குடி அருகேயுள்ள லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் மைக்கேல் ராஜா(26). சங்குகுளி தொழிலாளி. இவர் மற்றும் 10 தொழிலாளிகள் ஒரு படகில் சங்கு குளிக்க சென்றனர். நேற்று முன்தினம் காலையில் காயல்பட்டினம் அருகே படகை நிறுத்தி சங்குகுளி பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மைக்கேல் ராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு சக தொழிலாளிகள் அழைத்துச் சென்றனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருவைகுளம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்குகுளி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Michael Raja ,Subaiya ,Lurthammalpuram ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது