×

பாதாள சாக்கடை தொட்டி சேதம்: சாலையின் நடுவே வழிந்தோடும் கழிவுநீர்

 

ஊட்டி, ஜூன் 26: ஊட்டி – குன்னூர் சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டி சேதமடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி நகரில் தூய்மை பணிகள் அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்களில் இருந்து கழிவு அனைத்தும் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது. ஊட்டி தலையாட்டிமந்து முதல் பஸ் நிலையம் வரை உள்ள சாலையின் நடுவே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை அமைக்கப்படடு நீண்ட நாட்களாகிய நிலையில் பல இடங்களில் சேதமடைந்தும் பழுதடைந்தும் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஊட்டி – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாதாள சாக்கடை தொட்டி சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் கடும் துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலையில் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் ஏதுவும் சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டியில் சிக்கி விடாமல் இருக்கும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்துள்ள பாதாள சாக்கடையை ஊட்டி நகராட்சி சாி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பாதாள சாக்கடை தொட்டி சேதம்: சாலையின் நடுவே வழிந்தோடும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Charingcross ,Ooty – Coonoor ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...