×

க.மயிலாடும்பாறை அருகே புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு

வருசநாடு, ஜூன் 26: மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை கிராமத்தில் நூலக கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் புகார் மனு அளித்திருந்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

நேற்று புதிய ரேசன் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியின் போது திமுக கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டி, மயிலாடும்பாறை எம்பி 93 கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க செயலாட்சியர் சவுந்தரராஜன், கூட்டுறவு சங்க எழுத்தர்கள் பழனிச்சாமி, ரவி, ரேஷன் கடை விற்பனையாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post க.மயிலாடும்பாறை அருகே புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : K. Mayiladumparai ,Varusanadu ,Ponnanpadukai ,Mayiladumbarai ,Mayiladumpara ,Dinakaran ,
× RELATED கண்டமனூர் அருகே குப்பைக்கழிவு...