×

சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம்

தேவதானப்பட்டி, ஜூன் 26: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் வரக்கூடிய ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகருக்கு, திருமஞ்சனதிரவியம், மஞ்சள்பொடி, மாபொடி, பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடத்தப்பட்டது.

The post சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Anithirumanjana ,Nataraja ,Silwarpatti Nudayaduvanayanar temple ,Devadanapatti ,Uttiram ,Ani ,Silwarpatti Mundayaduvanayanar temple ,Silwarpatti Mundayaduvanayanar ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...