×

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: முன்னாள் பிரதமர் திரு.வி.பி சிங் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் “இட ஒதுக்கீடு எங்கள் உரிமை” என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர். வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி. சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி. சிங் அவர்களது சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. சமூகநீதிப் பயணத்தில் தலைவர் கலைஞரின் கூட்டாளி. பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி ரீதியிலான முன்னேற்றங்களுக்கு விதையாக இருந்த மண்டல் ஆணையப் பரிந்துரைகளுக்கு உயிர்கொடுத்தவர். அரசியலமைப்புச் சட்டத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்கப் போராடி வரும் இந்தச் சோதனை மிகுந்த காலத்தில், அவரது சமூக அரசியல் பணிகள் நமக்கு எழுச்சியூட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Former ,V.R. GP ,CM ,PM ,PM PM ,Singh ,G.K. ,stalin ,Chennai ,Shr. CV ,Tamil Nadu ,Chief Minister ,Municipality ,P Singh ,G.K. Stalin ,Former Prime Minister V. GP ,PM PM PM ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...