×

திட்டக்குழு முதல் கூட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

குலசேகரம், ஜூன் 25: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை (26 ம் தேதி) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பை பெற்றது. இங்கு 418 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஜூன் 26 ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு, தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. 5.30 மணி அளவில் சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை கோகுல் தந்திரி நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் தேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகர பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து லட்சதீபம் ஏற்றப்படுகிறது.

The post திட்டக்குழு முதல் கூட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Tiruvattar Adikesava Perumal Temple ,Varushapishekam ,Kulasekaram ,Varushabhishekam ,Thiruvatar Adhikesava Perumal Temple ,Thiruvatar Adhikesava… ,Thiruvatar Adikesava Perumal temple ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...