×

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ராஜபாளையம் அருகே கால்நடை சிறப்பு முகாம்: ஜூன் 27ல் நடக்கிறது

விருதுநகர், ஜூன் 25: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் ஊராட்சி தெற்கு தேவதானம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் கால்நடை பராமரிப்பு, ஆவின், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து இந்த முகாமினை நடத்துகிறது. இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்முறை கருவூட்டல் , மலடு நீக்க சிகிக்சைப்பணி, தடுப்பூசி, சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

கால்நடை வளர்ப்போர் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முகாமில் சிறப்பு கண்காட்சிகள், பால் உற்பத்தியை பெருக்கும் விளக்கம்,, தீவனப்பயிர் மற்றும் ஆவின் பால்பொருட்கள் கண்காட்சி, கால்நடை பண்ணை குறித்த புத்தக கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போரின் அனுபவங்களை அறிந்துகொள்ளும் வகையில் கேள்வி, பதிலுரை அளிக்க பேராசிரியர் தலைமையில் விவசாய கருத்தரங்கம் நடைபெறும். இதில் சிறந்த கால்நடை பண்ணையாளர்களை தேர்வு செய்து பரிசுகளும் வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ராஜபாளையம் அருகே கால்நடை சிறப்பு முகாம்: ஜூன் 27ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,South Devadanam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!