×

கல்கண்டு வடை

தேவையானவை

உளுந்தம்பருப்பு – அரை கிலோ
கல்கண்டு – அரை கிலோ
உப்பு – 2 சிட்டிகை
ஏலக்காய் – 6ரீபைண்ட்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

உளுந்தம் பருப்பை நன்றாகக் களைந்து ஊறவைத்து ஊறிய தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு கல் உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும். அவ்வப்போது சிறிது சிறிதாக கல்கண்டை சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. கல்கண்டிலிருந்து வரும் நீரே உளுந்தை அரைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.மாவை கெட்டியாக அரைத்து, உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக (நடுவில் ஓட்டை செய்து) தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

The post கல்கண்டு வடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாங்காய் வடை