×

அச்சிறுப்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதி ஆணைய சுகாதார மானியத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வட்டார சுகாதார அலகு கட்டிடம் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் எழிலரசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் கண்ணன் கலந்துக் கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன, பொதுக்குழு உறுப்பினர் உசேன், அவை தலைவர்கள் ரத்தினவேலு, சையத் முகமது, மாவட்ட கவுன்சிலர் மாலதி, மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சுரேஷ், சிவசங்கர், அகிலா செல்வம், மோனிகா ஆனந்த கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Government Initial Health Station ,Printakakakam Paradisi ,
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி