×

மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

காரிமங்கலம், ஜூன் 24: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோயமுத்தூர் இந்திய தர நிர்ணயம் மற்றும் ஸ்டாண்டர்ட் கிளப் சார்பில், ஹெல்மெட் தரம் குறித்த கட்டுரைப்போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய தர நிர்ணய ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் வரவேற்றார். ஸ்டாண்டர்ட் கிளப் மேற்கு மண்டல பயிற்றுநர் செந்தில்ராஜா மாணவர்களுக்கு போட்டியை பற்றி விளக்கி பேசினார். இந்த போட்டியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஹெல்மெட் குறித்து கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் ரொக்கப் பரிசினை வழங்கினார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்துகொண்டு, எந்த ஒரு பொருட்கள் வாங்கும் போதும் சரி பார்ப்பதின் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மனோகரன், ஸ்டாண்டர்ட் கிளப் தலைவர் இளமுருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Garimangalam ,Periyambatti Government Boys Higher Secondary School ,Coimbatore Indian Standardization and Standard… ,Dinakaran ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்