×

ஒன்றிய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாததால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: ‘ஒன்றிய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாததால் மதுரை தோப்பூரில் வரும் 2028க்குள் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் முடிக்கப்படும்’ என்று ஜப்பான் நிறுவனம் தெரிவித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரை ஆனையூரில் ரூ.6 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நகர் நல மையங்கள் கட்டுமான மையங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி நேற்று திறந்து வைத்தனர். இதேபோல, மதுரையில் நேற்று ஒரே நாளில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்களும் திறக்கப்பட்டன.

இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சமீபத்தில் டோக்கியோ சென்றிருந்தோம். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிகா) என்ற அமைப்புதான் மதுரை எய்ம்ஸ்சுக்கு கடன் தர ஒப்புதல் தந்திருக்கிறது. எனவே, எய்ம்ஸ் நிதி சார்ந்த பணிகள் தொடர்பாக ஜிகா அமைப்பின் துணைத்தலைவரை சந்தித்து கேட்டோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டரை 2024க்குள் முடித்து, கட்டிடம் கட்டி முடிக்க 2028 இறுதி ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் ஜிகா நிறுவனத்திடம் தமிழக அரசு மூலமாக நாமே தன்னிச்சையாக பேசி நிதியை கோரியிருக்கிறோம்.

ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் ஆண்டுதோறும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி வருகிறோம். எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அமைச்சர்களிடம் மீண்டும் வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய அரசுக்கு நிதியை உடனே விடுவிக்க ஜிகா நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கிற 21 மாநகராட்சிகளிலும் 63 நகராட்சிகளிலுமாக 78 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று 110 விதியில் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்தனர். ஆனால் 110 என்று அறிவித்த விதி மக்கள் நெற்றியில் 111 என்ற நாமமாக மாறிவிட்டது. மதுரையில் ஒரே நாளில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

The post ஒன்றிய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாததால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Union Government ,Minister ,M. Subramanian ,Madurai ,AIIMS ,Madurai Thopur ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...