×

மருந்தாளுனர் மாரடைப்பால் பலி

உசிலம்பட்டி, ஜூன் 23: மதுரை ஆனையூரை சேர்ந்தவர் குமரேச கண்ணன் (55). இவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளாக மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு வழக்கம்போல் பணிக்கு வந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர்கள், அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமரேச கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மருந்தாளுனர் மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Kumaresa Kannan ,Anyayur, Madurai ,Usilambatti Government Hospital ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம்