×

கவுமாரியம்மன் கோயில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

பெரியகுளம், ஜூன் 23: பெரியகுளம் தென்கரை கடைவீதியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா நடைபெறும். இந்தாண்டும் அடுத்த மாதம் 18 மற்றும் 19ம் தேதிகளில் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கோயில் முன்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அடுத்த மாதம் 4ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது. திருவிழா வருகிற 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

The post கவுமாரியம்மன் கோயில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Gaumariamman Temple Festival Muhurtakal ,Periyakulam ,Gaumariamman ,Ikhoil ,Gowmaryamman Temple Festival Muhurat Planting Festival ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...