- பெரியகுளம் கௌமாரியம்மன்
- பெரியகுளம்
- கவுமாரியம்மன் கோயில்
- பெருந்திருவிழா
- கௌமாரியம்மன்
- பெரியகுளம், தேனி மாவட்டம்
- பெரியகுளம் கௌமாரியம்மன் கோயில்
பெரியகுளம், ஜூலை 17: பெரியகுளத்தில் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாட்டுதல் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆனி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 2ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நடந்தது. இதையடுத்து, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனிப்பெருந்திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நேற்று கவுமாரியம்மனுக்கு கோயில் முன்பு உள்ள சாட்டுதல் கம்பத்திற்கு மஞ்சள் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். சில பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி மற்றும் ஆயிரம்கண் பானை எடுத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
The post பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.