×

போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

 

உடுமலை, ஜூன் 23: உடுமலைப்பேட்டை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரதியார் நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக்கான போக்சோ சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி மீனாட்சி, வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், தம்பி பிரபாகரன், பள்ளி தலையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர், தமிழாசிரியர் சின்னராசு மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.நீதிபதி மீனாட்சி பேசுகையில், மாணவிகளுக்கு பெண் கல்வியின் அவசியத்தையும், இரவில் தனியாக பாதுகாப்பாக பெண்கள் பயணம் செய்ய 1091 மற்றும் 112 என்ற எண்ணில் காவலர்களை தொடர்பு கொண்டு மக்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.

The post போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalaipet Circle Legal Affairs Committee ,Associate ,Judge ,Manikandan ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்